முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்பு கட்டி பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வண்டிகளில் பூக்களை எடுத்து வந்து அம்மன் சன்னதியில் சாற்றினர். பின்னர் அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.