மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

Update: 2023-04-26 18:54 GMT

விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. அதனையொட்டி மெய்க்கண்ணுடையாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை காமராஜர் நகர், பெரியார் நகர், எம்.ஜி.ஆர். நகர், தேரடி தெரு, தெற்குதெரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மின்னொளி பல்லக்கில் பக்தர்கள் பூக்களை வாணவேடிக்கை மற்றும் மேள தாளத்துடன் 4 ரத வீதிகளையும் சுற்றி எடுத்துவந்து மெய்க்கண்ணுடையாள் அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இதில் விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்