காளி கோவிலில் பூச்சொரிதல் விழா

காளி கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது

Update: 2023-07-14 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை பஸ் நிலையம் எதிரில் உள்ள பிள்ளை வயல் காளி கோவிலில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 8 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டும் விழா கடந்த 7-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. சிவகங்கை தெப்பக்குளத்தில் இருந்து பூ கரகம் எடுத்து வந்தனர். பின்னர் அம்மன் சன்னதி முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. ஆனி கடைசி வெள்ளியான நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் காளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்