கோவையில் பூக்கள் விலை உயர்வு

ஓணம் பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கேரளாவுக்கு தினமும் 30 டன் அனுப்பி வைக்கப்படுகிறது.

Update: 2023-08-24 19:15 GMT

கோவை


ஓணம் பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கேரளாவுக்கு தினமும் 30 டன் அனுப்பி வைக்கப்படுகிறது.


ஓணம் பண்டிகை


ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வாசலில் பூக்கோலம் போட்டு மகிழ்கிறார்கள். மேலும் பூஜை உள்ளிட்டவற்றுக்கும் பூக்களின் பயன்பாடு அதிகம் இருக்கிறது. இதனால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.


இது குறித்து பூமார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் அய்யப்பன் கூறியதாவது:-


ஓணம் பண்டிகைக்கு முக்கிய பூக்களான மஞ்சள் செண்டு மல்லி கிலோ ரூ.50, ஆரஞ்சு செண்டு மல்லி கிலோ ரூ.60, வாடாமல்லி ரூ.60, பட்டுபூ ரூ.80, சம்பங்கி ரூ.200 முதல் ரூ.300, துளசி-ரூ.50, அரளி-ரூ.200, ரெட்ரோஸ் ரூ.300, மல்லி கிலோ ரூ.1,200, முல்லை ரூ.600, ஜாதி மல்லி ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கேரளாவுக்கு தினமும் 30 டன்


ஓணம் பண்டிகைக்கு முன்பு கோவையில் இருந்து கேரளாவுக்கு தினமும் 100 டன்னுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். தற்போது ஆன்லைன் மூலம் பூக்கள் விற்பனை நடைபெறுகிறது. அதோடு தோட்டத்துக்கே சென்று பூக்களை கொள்முதல் செய்கிறார்கள்.


இதனால் பூ வியாபாரிகள் மூலம் தினமும் 30 டன் பூக்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனை யால் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோவையில் ஓணம் பண்டிகைக்கு பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் கடந்த வாரத்தை விட பூக்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஓணத்தையொட்டி வரும் நாட்களில் பூ விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்