உற்பத்தி குறைவால் பூக்கள் விலை உயர்வு

உற்பத்தி குறைவால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

Update: 2022-09-27 18:59 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் சுற்று வட்டாரப் பகுதிகளான கவுண்டன் புதூர், பேச்சிப்பாறை, செட்டிதோட்டம், ஓலப்பாளையம், ஓரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்குநகர், நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய உதிரிப்பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.250-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.140-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.50-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது. உற்பத்தி குறைவால் பூக்கள் விலை‌ உயர்ந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்