தூத்துக்குடி பூ மார்க்கெட்டிற்கு ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், பேரூரணி, அணியாபரநல்லூர், செட்டிமல்லன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருவர். ஆனால் நேற்று பூக்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்தது.
கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூ கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையானது. மேலும் கல்யாண மாலை கட்ட பயன்படும் ரோஜா பூ கட்டு ரூ.250-ல் இருந்து ரூ.350 ஆக உயர்ந்தது. முகூர்த்த தினங்கள் தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.