கோடை வெயிலால் பூக்கள் விலை வீழ்ச்சி

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.

Update: 2023-05-21 19:45 GMT

மலர் சாகுபடி

வடகாடு பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, பிச்சி, அரளி, சென்டி, ரோஜா போன்ற பூக்கள் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி ஆகும் பூக்கள் அந்தந்த ஊர்களில் உள்ள பூ கமிஷன் கடைகள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் முதல் வெளிமாவட்டங்கள் வரை பஸ், மோட்டார் சைக்கிள், சரக்கு வேன் உள்ளிட்டவைகளில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

விலை வீழ்ச்சி

அதிகாலை நேரங்களில் இருந்தே பூக்களை பறித்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விற்பனை நிலையங்களுக்கு விவசாயிகள் பூக்களை கொண்டு சேர்த்தாக வேண்டும். அதனால் கூலி விவசாய தொழிலாளர்களை பயன்படுத்தி பூக்களை பறிக்கும் விவசாயிகள். ஒரு கிலோ பூ பறிக்க ரூ.50 வரை கூலி கொடுக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது வெயில் காலை 8 மணிக்கு எல்லாம் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால் பூக்களை பறிக்க படாதபாடு பட வேண்டி இருப்பதாகவும், மேலும் தற்போது கோடை வெயிலால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி இருப்பதால் பூக்கள் விற்பனையும் சரிவர நடப்பது இல்லை எனவும் கூறப்படுகிறது. பூக்களின் விலை வீழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் மலர் சந்தை மற்றும் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பூக்களின் விலை நிலவரம்

1 கிலோ மல்லிகை ரூ.150, முல்லை ரூ.120, கனகாம்பரம் ரூ.300, சென்டி ரூ.40, ரூ.50, பிச்சி ரூ.30, ரூ.40, சம்பங்கி ரூ.10, ரூ.20 ஆகிய விலைகளில் விற்பனை ஆகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்