பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டை, அவரைக்காய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. அதில் லாபம் கிடைக்கவில்லை. இதனால் பூ வகைகளை சாகுபடி செய்ய தொடங்கி உள்ளார்கள். கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தில் செவ்வந்தி பூவை பயிரிட்டுள்ள குருராசன் கூறும்ேபாது " ஒரு நாற்று 37 ரூபாய் என்ற விலையில் சேலத்தில் வாங்கினேன். மொத்தமாக 5ஆயிரம் நாற்றுகளை வாங்கி வந்தேன். முதலில் 4ஆயிரத்து 500 நாற்றுகளை நடவு செய்த நிலையில் நடவு செய்து வளராத நாற்றுக்கு பதிலாக மீதம் இருந்த 500 நாற்றுகளையும் நடவு செய்தேன். நடவு செய்து 3 மாதங்கள் ஆகின்றன. இதுவரைக்கும் 8 முறை கலை எடுத்துள்ளேன். தற்போது நன்றாக பூக்க தொடங்கி உள்ளது என்றார்.