தர்மபுரியில் பூக்கள் விலை உயர்வு

Update: 2022-10-20 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தர்மபுரி மாவட்டத்தில் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி நேற்று ரூ.200 அதிகரித்து, ரூ.600-க்கு விற்பனையானது.

ரூ.400-க்கு விற்பனையான ஒரு கிலோ சன்ன மல்லி ரூ.600-க்கும், ரூ.200-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.500-க்கும், ரூ.240-க்கு விற்பனையான ஜாதி மல்லி ரூ.280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஐப்பசி மாத பூஜைக்கு பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்