தேன்கனிக்கோட்டையில் ஒரே செடியில் அதிகளவில் பூத்த பிரம்ம கமல பூக்கள்
தேன்கனிக்கோட்டையில் ஒரே செடியில் அதிகளவில் பூத்த பிரம்ம கமல பூக்கள்
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே திம்மராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக பிரம்ம கமலம் செடியை வளர்த்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இந்த செடியில் கடந்த சில ஆண்டுகளாக 10, 20 என பூக்கள் பூத்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பிரம்ம கமலம் செடியில் 100-க்கும் மேற்பட்ட பூக்கள் கொத்து கொத்தாக பூத்தன. இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களது வீட்டுக்கு சென்று பிரம்ம கமலம் பூக்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அதற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.