மல்லிகைப்பூ கிலோ ரூ.400-க்கு விற்பனை

Update: 2023-05-21 16:35 GMT


திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வைகாசி மாதம்

தற்போது சித்திரை மாதம் முடிந்து வைகாசி மாதம் தொடங்கியுள்ளது. வைகாசி மாதம் என்றாலே திருமணம்,காது குத்து உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும். சுப நிகழ்ச்சிகளில் பூக்கள் முக்கிய பங்கு வகிப்பதால் இந்த மாதம் பூக்களின் விலை அதிகமாக இருக்கும்.

இன்று (திங்கட்கிழமை) சுபமுகூர்த்த தினம் என்பதால் நேற்று திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பூ வாங்க மக்கள் அதிகமாக வந்திருந்தனர். மேலும் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூக்களின் விலை விவரம்

பூ மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட பூக்களின் விலை விவரம் (1 கிலோவிற்கு) வருமாறு:- மல்லிகைப்பூ ரூ.400, முல்லைப்பூ ரூ.200, சாதிப்பூ ரூ.120, கனகாம்பரம் ரூ.320, அரளி பூ ரூ.100, சம்பங்கி ரூ.40, கோழிக்கொண்டை ரூ.80, செண்டு மல்லி ரூ.50 ஆகிய விலைகளில் விற்கப்பட்டது. அதுபோல் ஒரு தாமரைப்பூ ரூ.10-க்கு விற்கப்பட்டது.

பூக்களின் விலை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் "வைகாசி மாதம் ஆரம்பம் என்பதால் பெரிய அளவில் பூக்களின் விலை உயரவில்லை. இனி வருகிற முகூர்த்த தினங்களில் பூக்கள் விலை அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்