வேலூர் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
வேலூர் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல தமிழகத்தை ஒட்டி உள்ள ஆந்திர மாநில எல்லை வனப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதேபோல பாலாற்றின் கிளை ஆறுகளான மலட்டாறு, மண்ணாறு, அகரம்ஆறு, பேயாறு, பொன்னையாறு, கவுண்டன்யஆறு உள்ளிட்ட ஆறுகளின் வெள்ளமும் பாலாற்றில் சங்கமிப்பதால் வேலூர் பாலாற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தில் நின்றவாறு ஏராளமானவர்கள் பாலாற்றில் வெள்ளம் ஓடுவதை வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர். சிலர் செல்போனில் படம் பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.