கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-10-15 19:30 GMT

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வருகின்ற தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் முக்கொம்பு மற்றும் கல்லணையை வந்தடைந்தவுடன் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆலோசனையின் பேரில் அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எச்சரிக்கை

பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி கிராம மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் உடனே நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், கால்நடைகளை குளிப்பாட்டவும், மேய்ச்சலுக்கும் ஆற்றிற்கு ஓட்டிச் செல்லக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமும் கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் கரையோர கிராமங்களில் எச்சரிக்கை பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்