கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை

கொரடாச்சேரி அருகே கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

Update: 2022-06-01 17:57 GMT

திருவாரூர், ஜூன்.2-

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் குணா, கொரடாச்சேரி நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர் சுப்பு, மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை அருகே உள்ள மேலஒட்டக்குடி கிராமத்தில் கடந்த மே 1-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சி கொடி ஏற்றி வைத்தனர். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி மேலஒட்டக்குடி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பம் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது, இது குறித்து கொடராச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கொடிக்கம்பத்தை உடைத்தவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கொடிக்கம்பத்தை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்