நாமக்கல் அருகே தி.மு.க. கொடியேற்று விழா-ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள வீசாணம் சிவாஜி நகர் மற்றும் வேட்டாம்பாடி அருந்ததியர் காலனியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் புதிதாக கொடிகம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தலைமை தாங்கி கட்சி கொடியேற்றினார். இதில் ஒன்றிய செயலாளர் பழனிவேல், மாவட்ட துணை செயலாளர் நலங்கிளி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி மணி, ஒன்றிய பொருளாளர் கணேசன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கிருபாகரன் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.