கில்லா வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

ஆரணி கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-06-01 16:31 GMT

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஹம்சம், சிம்மம், அனுமன், சேஷ, கருடன், யானை, குதிரை, சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

5-ந்தேதி இரவு 'சிகர' நிகழ்ச்சியாக கருடசேவை நடக்கிறது. 6-ந்தேதி புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள கற்பக விருட்ச வாகனத்தில் உற்சவர் வேணுகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 7-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்