அரசு பள்ளியில் கொடி நாள் கடைபிடிப்பு

அரசு பள்ளியில் கொடி நாள் கடைபிடிப்பு

Update: 2022-12-08 18:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே உள்ள குந்தலாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கொடி நாள் கடைபிடிக்கபட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பள்ளி தலைமை ஆசிரியர் பஜித் குமார் பேசும்போது, முன்னாள் படை வீரர்கள் நலன் கருதி கொடி கொடுத்து நிதி திரட்டுவதற்காக கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிதி மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது என்றார். பாரத சாரண-சாரணிய இயக்க(பொறுப்பு) ஆசிரியர் மா.பால்துரை பேசுகையில், ஆடம்பர செலவுகளை தவிர்த்து நாட்டை பாதுகாக்க உழைத்த ராணுவ வீரர்களுக்கு உதவ சிறப்பு வாய்ப்பாக கருதி நிதி வசூலித்து தர வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பாரத சாரண-சாரணிய இயக்க மாணவர்கள் நிதி திரட்டினார்கள். இந்த நிதி, முதன்மை கல்வி அலுவலர் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்