துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல அனுமதி இல்லை கலெக்டர் அரவிந்த் தகவல்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீன்பிடிக்க செல்ல அனுமதி இல்லை என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-17 15:39 GMT

நாகர்கோவில், 

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீன்பிடிக்க செல்ல அனுமதி இல்லை என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

படகுகள் பாதிப்பு

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தொடர்ந்து கடல் அலை சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால், துறைமுக முகத்துவாரத்தினை கடந்து செல்லும் படகுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3 மாதங்களில் மீன்பிடித்துறைமுக முகத்துவாரத்தில் கடல் அலை சீற்றத்தால் படகுகளுக்கும், மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஆய்வு செய்ததில் எந்திரம் பொருத்திய வள்ளங்களும், எந்திரம் ெபாருத்தாத கட்டுமரங்களும் பாதிப்பு அடைந்து வருவது தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்பொழுது மீன்பிடிப்பு மற்றும் மீன்விற்பனை தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

தேங்காப்பட்டம் முகத்துவாரத்தில் கடல்அலை சீற்றத்தின் பாதிப்பு உள்ளதாலும், பராமரிப்பு பணிகள் முடியும் வரை துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை. எனவே எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் அவரவர் கிராமங்களில் இருந்தும், வாய்ப்புள்ள பிற இடங்களில் இருந்தும் பாதுகாப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு கேட்டுக் ்கொள்ளப்படுகிறார்கள்.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் விசைப்படகுகள், வானிலை எச்சரிக்கை காலங்கள் தவிர இதர நாட்களில் உரிய மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடி தொழில் மேற்கொள்ளலாம். மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் படகுகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை அனைத்து படகு உரிமையாளர்களும், துறைமுக பயனீட்டாளர்களும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்