தண்டலை ஏரியில் மீன் பிடி திருவிழா
தண்டலை ஏரியில் மீன் பிடி திருவிழா கிராமமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் உள்ள ஏரியில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது ஏரியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதை அடுத்து மீன் பிடி திருவிழா நடைபெற்றது.
இதில் தண்டலை, பெருவங்கூர், சூளாங்குறிச்சி, அகரக்கோட்டாலம், வாணியந்தல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி வலை, பக்கெட், துண்டு ஆகியவற்றை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர். இதில் சுமார் 2 டன் எடையளவில் கட்லா, கண்ணாடி கெண்டை, விறால், கெளுத்தி உள்ளிட்ட பலவகையான மீன்கள் பிடிபட்டன.