திருச்சி கள்ளிப்பட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டிய மீன்பிடி திருவிழா

புரட்டாசியையும் பொருட்படுத்தாமல், மீன்பிடி திருவிழாவில் ஏராளமான மக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.

Update: 2022-09-25 08:43 GMT

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கள்ளிப்பட்டியில் உள்ள கள்ளிக்குளத்தில் இன்று மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தொடர்மழையால் நிரம்பிய குளத்தில் துள்ளி விளையாடிய மீன்களை மக்கள் வலை வீசிப் பிடித்தனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில், புரட்டாசியையும் பொருட்படுத்தாமல், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்றனர். கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என வகை வகையான மீன்கள் வலைகளில் சிக்கியதால், மக்கள் உற்சாகமடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்