மீன்பிடி திருவிழா
சிலுவத்தூர் கோடாங்கிநாயக்கர்குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
சாணார்பட்டி அருகே சிலுவத்தூரில் கோடாங்கிநாயக்கர்குளம் உள்ளது. இந்த குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வலை, மூங்கில் கூடைகளை கொண்டு குளத்தில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இவர்களுக்கு ஜிலேபி, கட்லா, விரால், பாறை மீன்கள் சிக்கியது. பிடிபட்ட மீன்களை தங்களது வீடுகளுக்கு கொண்டு சமைத்து சாப்பிட்டனர். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கும் மீன்களை பங்கிட்டு கொடுத்து மகிழ்ந்தனர்.