திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா
திருப்பத்தூர் அருகே மீன்பிடித் திருவிழா நடைபெற்றது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சியில் உள்ள மதகுக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் பலரும் அதிகாலை முதலே மதகுக்கண்மாயில் ஒன்று திரண்டனர். ஊர் முக்கியஸ்தர்கள் கனகக்கருப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்பு கண்மாய் கரை மேல் உள்ள பாறையில் நின்று வெள்ளைகொடி வீசினர். அதன் பின்பு மதகுக்கண்மாயில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கட்லா, விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல வகை மீன்களை பிடித்தனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக மீன்பிடிக்காமல் இருந்ததால் கண்மாயில் மீன்கள் அதிக அளவில் பிடிபட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.