சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை

சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-15 19:30 GMT

ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறியதாவது:-

தடைக்காலம் முடிந்து கடலுக்கு திரும்பி உள்ளோம். தமிழ்நாடு அரசு தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை, சுருக்குவலை ஆகியவற்றை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து, தமிழக மீனவர்கள் சுதந்திரமாக ஆழ்கடல் வரை சென்று அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வு காரணமாக ஆழ்கடல் செல்லும் மீனவர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் மீன்கள் கிடைக்கும் வரை கடலில் தங்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு தங்கும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்