பழையாறு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
பழையாறு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. மேலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 350 விசைப்படகுகள், 400 பைபர் படகுகள், 200 நாட்டுப்படகுகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தினமும் மீன்பிடிக்க செல்வது வழக்கம். மாண்டஸ் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் மீண்டும் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.