'மாண்டஸ்' புயல் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மீனவர்கள்

‘மாண்டஸ்’ புயல் காரணமாக 3 நாளாக மீனவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

Update: 2022-12-09 20:19 GMT

வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்கள் வேலை இழந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்தநிலையில் 'மாண்டஸ்' புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்குமாறு மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்குமாறு படகுகளை நிறுத்த வேண்டாம் எனவும், தனித்தனியாக படகுகளை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் தனித்தனியே நிறுத்தி வைத்தனர். இதேபோல் நாட்டுப்படகு மீனவர்களும் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்