நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

Update: 2024-05-16 11:07 GMT

சென்னை,

 மீன்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி இன்று 16.05.2024 முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 45 கி.மீ வரை அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும் மற்றும் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே, நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கையினை மீனவ கிராம ஆலயங்கள் வாயிலாக அறிவிப்பு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்