கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை அறிவுறுத்தல்
மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்க கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வேகமாக காற்று வீசும் காரணத்தால் மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.