மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

பழையாறில் கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2022-12-20 18:45 GMT

கொள்ளிடம்:

பழையாறில் கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையார்மீன்பிடி துறைமுகத்தின் மூலம் 350 விசை படகுகள், 400 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீன்பிடி துறையின் அறிவுறுத்தலின் பேரில் 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவிலலை.

மீன்பிடிக்க செல்லவில்லை

இதேபோல் கொடியம்பாளையம், மடவாமேடு, கொட்டாய்மேடு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இது குறித்து பழையார் மீனவர்கள் கூறியதாவது. கடல் சீற்றம் காரணமாக கடந்த 3 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகளை பழையார்துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளோம்.

நிவாரணம் வழங்க வேண்டும்

தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் அதிகரித்து வருவதால் கடந்த 20 நாட்களாக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளோம். எனவே அரசு மீனவர்கள் நலன் கருதி நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்