53 ஆட்டு கிடாக்களை வெட்டி சிறப்பு பூஜை செய்த மீனவர்கள்

அதிக அளவில் மீன்கள் கிடைக்க வேண்டி கோடியக்காடு சேர்வராயன் கோவிலில் 53 ஆட்டு கிடாக்களை வெட்டி மீனவர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

Update: 2022-06-18 17:15 GMT

வேதாரண்யம்:

அதிக அளவில் மீன்கள் கிடைக்க வேண்டி கோடியக்காடு சேர்வராயன் கோவிலில் 53 ஆட்டு கிடாக்களை வெட்டி மீனவர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

சேர்வராயன் கோவில்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறையில் 1,000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மீனவ கிராமத்தில் 65 விசைபடகுகளும், 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் உள்ளன. மீனவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

வங்களா விரிகுடாவும், பாக்ஜலசந்தியும் சந்திக்கும் இடமான கோடியக்காடு பகுதியில் சேர்வராயன் கோவில் உள்ளது. மீன்பிடிக்க செல்வதற்கு முன்பு மீனவர்கள் தினமும் சேர்வராயன் கோவிலில் வழிபடுவது வழக்கம். மீனவர்கள் தங்களது காவல் தெய்வமாக சேர்வராயனை வணங்கி வருகின்றனர்.

கிடாய் வெட்டி சிறப்பு பூஜை

ஆண்டு தோறும் இந்த கோவிலில், மீன் வளம் பெருக வேண்டியும், அதிக அளவு மீன்கள் கிடைக்க வேண்டியும் ஆட்டு கிடாக்களை வெட்டி மீனவர்கள் சிறப்பு பூஜை செய்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பூஜை செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆறுகாட்டு துறையை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன் வளம் பெருக வேண்டியும், அதிக அளவு மீன்கள் கிடைக்க வேண்டியும் சேர்வராயன் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சோனி சுவாமிக்கு 53 ஆட்டுக்கிடாக்களை வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் சேர்வராயன் மற்றும் சப்த கன்னிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இதை தொடர்ந்து அனைவருக்கும் கறி விருந்து அளிக்கப்பட்டது.

------

Tags:    

மேலும் செய்திகள்