வலை பின்னும் பணியில் மீனவர்கள் மும்முரம்

வலை பின்னும் பணியில் மீனவர்கள் மும்முரமாக நடைபெற்றது.

Update: 2023-06-06 18:00 GMT

மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் ேததி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க மீன்வளத் துறையால் தடை விதிக்கப்படும். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் நாகப்பட்டினம், காரைக்கால், ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் கணிசமாக உள்ள நிலையிலும், அவர்களும் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். தற்போது வருகிற ஜூன் 14-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால் மீனவர்கள் இப்பகுதிக்கு வந்து தங்களது படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடிக்க தேவையான வலைகளை பின்னும் பணியில் இரவு பகல் என்று மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 மாதங்கள் வெறிச்சோடி கிடந்த மீன்பிடி துறைமுகங்கள் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்