வீட்டில் தவறி விழுந்த மீனவர் சிகிச்சை பலனின்றி சாவு

வேதாரண்யம் அருகே வீட்டில் தவறி விழுந்த மீனவர் சிகிச்சை பலனின்றி சாவு

Update: 2022-10-30 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகாவிற்கு உட்பட்ட புஷ்பவனம் மீனவர் காலனியில் வசித்து வந்தவர் ராஜீ(வயது 38). மீன்பிடிக்கும் தொழிலாளி. இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜீ நேற்று இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்