சாயல்குடி
ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது35) மீனவர். இவர் தூத்துக்குடியில் மீன்பிடி தொழில் செய்துவிட்டு ராமேசுவரம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தூத்துக்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சாயல்குடி அருகே உறைக்கிணறு அருகே வரும்போது சாயல்குடியில் இருந்து சென்ற டிப்பர் லாரி மீனவர் மகேஷின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மகேஷ் உடலை கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து ஏற்படுத்திய சாயல்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராமரிடம் (50) சாயல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.