மதுகுடித்ததை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
மதுகுடித்ததை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே குறும்பனை இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் ததேயூஸ் எட்மண்ட் மகன் அருள் அபிஷேக் (வயது 24). மீனவரான இவர் மதுகுடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அருள் அபிஷேக் சம்பவத்தன்று படுக்கை அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.