மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய தி.மு.க. பிரமுகர்
திசையன்விளை அருகே மீன்வளத்துறை அதிகாரியை தி.மு.க. பிரமுகர் மிரட்டிய வீடிேயா வாட்ஸ்-அப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது
திசையன்விளை:
திசையன்விளை அருகே மீன்வளத்துறை அதிகாரியை தி.மு.க. பிரமுகர் மிரட்டிய வீடிேயா வாட்ஸ்-அப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுருக்குமடி வலை
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக மீனவளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் உத்தரவின் பேரில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துைற ஆய்வாளர் உத்திராண்டு ராமன், உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதிகாரியுடன் வாக்குவாதம்
அப்போது, அங்கு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்பட்டது தெரியவந்தது. அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை உத்திராண்டு ராமன் பறிமுதல் செய்ய முயன்றார்.
அந்த சமயத்தில் அங்கு உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான அந்தோணி ராய் என்பவர் வந்தார். அவர் மீன்வளத்துறை அதிகாரி உத்திராண்டு ராயிடம் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பணி செய்ய விடாமல், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
வாட்ஸ்-அப்பில் வீடியோ
இதுகுறித்து உவரி போலீசில் உத்திராண்டு ராமன் புகார் செய்தார். அதன்பேரில் வள்ளியூர் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரேமா, அந்தோணிராயை வலைவீசி தேடிவருகிறார்.
இதற்கிடையே, மீன்வளத்துறை அதிகாரியை, அந்தோணி ராய் மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.