ஆற்றில் மூழ்கி மீனவர் பலி

ஆற்றில் மூழ்கி மீனவர் பலியானார்.

Update: 2023-05-17 19:00 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை புதுக்கோட்டகம் கமெண்டியடி பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது45). மீனவர். இவர் தப்பதாண்வெளி பகுதியில் செல்லும் பாமணியாறு சட்ராஸ் பகுதியில் நேற்று மதியம் வலைவீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது பத்மநாபன் திடீரென்று நீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை நீண்டநேரம் தேடினர். இதில் அவர் ஆற்றில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்