பணிகளின் போது அகற்றப்பட்ட மீன் சிலையை முக்கிய பகுதியில் நிறுவ வேண்டும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
மதுரையில் அகற்றப்பட்ட மீன் சிலையை முக்கிய பகுதியில் நிறுவ வேண்டுமென ஐகோர்ட்டு மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.
மதுரை,
மதுரையில் அகற்றப்பட்ட மீன் சிலையை முக்கிய பகுதியில் நிறுவ வேண்டுமென ஐகோர்ட்டு மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.
மதுரை ரெயில் நிலையத்தை புதுப்பிக்கும்போது அகற்றப்பட்ட மீன் சிலையை, மீண்டும் நிறுவ ஆணையிடக்கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரையை ஆண்ட பாண்டியர்களின் அடையாளமாக மக்கள் மீன் சிலையை பார்ப்பதாக குறிப்பிட்டனர்.
ரெயில் நிலையத்தில் மீண்டும் மீன் சிலையை நிறுவ முடியாது என்பதால், மதுரை மாநகராட்சியின் முக்கிய பகுதி ஒன்றில் மீன் சிலையை நிறுவ ஆணையிட்ட நீதிபதிகள், அதற்கான இடத்தை தேர்வு செய்ய மூத்த வக்கீல் காந்தி தலைமையில், மதுரை எம்.பி, எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.