பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு அதிக அளவில் புகார்கள் சென்றன. இந்த நிலையில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் ஒகேனக்கல் மீன் விற்பனை கூட பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பல கடைகளில் அழுகிய நிலையில் மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 500 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து உடனடியாக அவை குழி தோண்டி புதைக்கப்பட்டன.