உக்கடம் மார்க்கெட்டில் மீன் விற்பனை மந்தம்

உக்கடம் மார்க்கெட்டில் மீன் விற்பனை மந்தமாக இருந்தது.

Update: 2023-02-05 18:45 GMT

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, ராமேசு வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலம் கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் 50 முதல் 70 டன் வரை மீன்கள் கொண்டு வரப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் 100 டன் வரை மீன்கள் கொண்டு வரப்பட்டது.

சமீபத்தில் புயல் காரணமாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கோவைக்கு மீன் வரத்து சற்று குறைந்தது. ஆனால் மீன்கள் விலையில் மாற்றமில்லை.

இது குறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், தைப்பூசம் காரணமாக மீன்களின் விற்பனை மந்தமாக இருந்தது. நேற்று கிலோ ஒன்றுக்கு சங்கரா ரூ.400 முதல் ரூ.550, வஞ்சிரம் ரூ.600, மத்தி ரூ.80 முதல் ரூ.100, அயிலை ரூ.120 முதல் ரூ.150, விளை மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்