வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
வரத்து குறைவால் வேலூர் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டுவரப்படுகிறது. இங்கு விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அசைவ பிரியர்கள் மீன்மார்க்கெட்டில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த மீன் வகைகளை வாங்கிச் சென்றனர். மீன்பிடி தடைகாலம் என்பதால் வழக்கத்தை விட மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. அதனால் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. எனினும் மீன்களை பலர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.