விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி
எச்.புதுப்பட்டியில் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு கூழ்மம் முறையில் பண்ணை திலேபியா மீன் வளர்ப்பு பயிற்சி எச்.புதுப்பட்டியில் நடந்தது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறையின் மேற்பார்வையாளர்கள் சிங்கம்துரை, சங்கர் ஆகியோர் துறை ரீதியான மானிய திட்டங்கள் மற்றும் கூழ்மம் முறையில் பண்ணை திலேபியா மீன் வளர்ப்பு குறித்து விளக்கி கூறினர். இதில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் செய்திருந்தார்.