முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது.
வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் கலைக்கல்லூரில் இளங்கலை முதலாமாண்டு மாணவ- மாணவிகளின் சேர்க்கை கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதில் 12 துறைகளில் உள்ள 984 இடங்களுக்கு சேர்க்கை முடிவு பெற்றது.
இந்தநிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கியது. காலை முதலே மாணவர்கள் கல்லூரிக்கு ஆர்வமுடன் வந்தனர். அவர்களை கல்லூரி முதல்வர் மலர் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர்.