மாணவருக்கு முதல் பரிசு
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கல்லூரி மாணவர் முதல் பரிசினை பெற்றார்.
சிவகாசி,
தூத்துக்குடியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர் மகேந்திர கண்ணன் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். மாநில அளவில் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை கல்லூரியின் தாளாளர் சோலைசாமி, இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, துறைத்தலைவர் ஸ்ரீராம், உடற்கல்வி இயக்குனர் சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ரெங்கராஜ் ஆகியோர் பாராட்டினர்.