முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-26 05:46 GMT

சென்னை,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப்பில் உள்ள கா என்ற கிராமத்தில் கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல் பிறந்தவர். பஞ்சாப் பல்கலை கழகம், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகங்களிலும் அவர் படித்து பட்டம் பெற்றுள்ளார்.

2004 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் 2 முறை தொடர்ச்சியாக நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான அவருக்கு இன்று 90 வயது பூர்த்தியாகிறது. இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "முன்னாள் பிரதமர், கல்வி அறிவு மிக்க அறிஞர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவர் ஆட்சியில் ஸ்திரத்தன்மையை வழங்கினார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் போக்கினார், பணிவின் உருவகமாக இருந்து இதையெல்லாம் செய்தார். அவர் நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்