தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை,
தெலுங்கானா கவர்னரும் , புதுசேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தராஜன் இன்று தனது 61 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறும்போது, "தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான திருமதி. தமிழிசை அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்