பல்வேறு திட்டப் பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

பல்வேறு திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-06-10 02:22 GMT

சென்னை,

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ரூ.270.5 கோடியில் தமிழகம் முழுவதும் 9 இடங்களில் கட்டிய குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

தாமாக வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ரூ.500 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை 23,826 பயனாளிகளுக்கு வழங்குகிறார். 4,880 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையும், 938 பேருக்கு கிரயப்பத்திரங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் போக்குவரத்தை சீர் செய்திட சென்னை காவல்துறைக்கு ௯௩ ரோந்து வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்