ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கான தேசிய தர உறுதி சான்றிதழ் பெறுவதில் முதலிடம்

அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கான தேசிய தர உறுதி சான்றிதழ் பெறுவதில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

Update: 2023-07-15 19:06 GMT

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மலேரியா, காசநோய், ஹீமோகுளோபின் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இந்திய தர கவுன்சிலின் ஒரு அங்கமான தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வகங்களுக்கான தர உறுதி சான்றினை வழங்கி வருகிறது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் பச்சூர் உள்ளிட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் ஆய்வகங்களுக்கான தர உறுதி சான்றிதழ் கடந்த 2022-ம் ஆண்டு வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது கெஜல்நாயக்கன்பட்டி, மாதனூர் மற்றும் வள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர உறுதி சான்று பெறப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் 4 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு இச்சான்றிதழ் பெறப்பட்டு மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. மேலும் புதுப்பேட்டை மற்றும் கதிரம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த வட்டார மருத்துவ அலுவலர்கள், ஆய்வக நுட்புனர்கள், மாவட்ட நுண்ணுயிர் ஆய்வாளர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஆகியோர் கலெக்டர் பாஸ்கரபாண்டியனிடம் தேசிய தர உறுதிச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்