முதலாம் ஆண்டு விளையாட்டு விழா
சாரதாம்பாள் சீனிவாச முதலியார் நினைவு பாடசாலையில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, வடுகந்தாங்கல் சாரதாம்பாள் சீனிவாச முதலியார் நினைவுபாடசாலையில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். பள்ளி முதல்வர் சுஜாதா வரவேற்றார்.
மாணவர்கள், பெற்றோர்களுக்கு பல்வேறுவிளையாட்டு போட்டிகள் நடை பெற்றது. சாதனைபடைத்த விளையாட்டு வீரர்களுக்கு பள்ளியின் முதல்வர் சுஜாதா, துனண முதல்வர் ஸ்ரீவித்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முடிவில் மாணவர் தலைவர் சைதன்யா நன்றி கூறினார்.