கோத்தகிரி அருகே சாலையோர புல்வெளியில் திடீர் காட்டுத்தீ-தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்
கோத்தகிரி அருகே சாலையோர புல்வெளியில் திடீர் காட்டுத்தீ-தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்
கோத்தகிரி
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் செடி, கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து காணப்படுகிறது. இந்த--நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில் இருந்து கூக்கல்தொரை செல்லும் சாலையோரத்தில் இருந்த காய்ந்த புல்வெளிகள் மற்றும் செடி-கொடிகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கவனித்த பொதுமக்கள் இதுபற்றி உடனடியாக கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கருப்பசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதனால் ஏராளமான பரப்பில் இருந்த புல்வெளிகள் காட்டுத் தீயால் எரிந்து சேதமாக இருந்தது தடுக்கப்பட்டது.