தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2022-10-10 11:35 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்த்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்