திருத்தங்கலில் பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

திருத்தங்கலில் பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-06 20:30 GMT

சிவகாசி, 

திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் செல்லச்சாமி, வருவாய்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வெள்ளையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் ஆய்வு செய்தார். அப்போது அந்த குடோனில் உரிய அனுமதி பெறாமல் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த குடோனை நடத்தி வந்த ரமேஷ் என்பவர் மீது திருத்தங்கல் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் செல்லச்சாமி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்